அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

06 அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதற்கமைய, 425 கிராம் நிறையுடைய டின் மீன் ஒன்றின் விலை 530 ரூபாவிலிருந்து 475 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 285 ரூபாவிலிருந்து 280 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி கிலோ கிராம் ஒன்றின் விலை 180 ரூபாவிலிருந்து 175 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பருப்பு, வெள்ளை அரிசி, நாட்டரிசி போன்றவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply