கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்!

குழந்தைகள் மத்தியில் கோவிட் பரவும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களில் இரண்டு கோவிட் தொற்றுடைய குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சளி போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் இருந்தால், அவர்கள் முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும், சமீபத்தில் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றியுந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக குழந்தைகளுக்கு மேல் சுவாசக்குழாய் சம்பந்தமான பல நோய்கள் பரவி வருவதாகவும் அதில் வைரஸ் நோய்களே பிரதானமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக வயிற்றோட்டம் உள்ள பல சிறுவர்களும் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் கோவிட் தொற்றுடைய சிறுவர்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply