மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சரும் மன்னார் , முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம் , திலீபன் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பண்டுள்ளசேன உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , ஆணையாளர்கள் , பணிப்பாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைமுறைப் படுத்துவதற்கான செயற்பாட்டு அனுமதி திட்டம் சமர்பிக்கப்பட்டதோடு முன்னர் நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் பிரதேச செயலகங்களினாலும் முன்மொழியப்பட்டுள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்வதற்கான ஒரு கூட்டமாக இது அமைந்திருந்தது.