நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் 2.30 மணிவரை அமுலில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் சொரணதொட்டை மற்றும் பசறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும், மொனராகலை மாவட்டத்தில் மெதகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் 2ம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.