போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 1554 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 82 சந்தேக நபர்களிடம் தடுப்பு உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு சந்தேகநபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் போதைப்பொருளுக்கு அடிமையான 62 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 128 பேரும் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், அத்துடன், 590 கிராம் ஹெரோயின், 1 கிலோ 300 கிராம் ஐஸ், 6 கிலோ 330 கிராம் கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.