நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.