ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் உள்ள விமானமொன்று இன்று(02.01) விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கடலோர காவல்படை விமானமொன்றில் மோதியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தின் போது விமானத்தில் 379 பயணிகள் இருந்ததோடு, அவர்கள் அனைவரும் எந்தவித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விபத்தினால் கடலோர காவல்படை விமானமும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக டோக்கியோவின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் கடலோரக் காவல்படை, விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.