மட்டக்களப்பில் 45 உயர்தர பரீட்சை மையங்களும் தயார் நிலையில்!

இன்று (04.01) நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை மட்டக்களப்பில் 45 பரீட்சை நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பரீட்சை மையங்களில் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக மழையையும் பொருட்படுத்தாது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் பொதுச்சுகாதார உத்தியோகத்தினரால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது டெங்கு பாதுகாப்பு தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊடக பிரிவிற்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அத்தோடு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு தனது முற்கூட்டிய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply