ஈரானில் இடம்பெற்றுள்ள இரண்டு குண்டுவெடிப்புகளில் 103 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியப் புரட்சிப் படையின் ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தீவிரவாத தாக்குதல் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளதுடன், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.