தலவாக்கலை, லிந்துல ரஹான்வத்த தோட்டத்திலுள்ள தோட்ட சுண்ணாம்பு அறை வீடுகளில் இன்று (04.01) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஸ்டேட் வீடொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க தோட்ட பணியாளர்கள் வீட்டின் இருபுறமும் இருந்த இரண்டு வீடுகளின் கூரைகளை விரைவாக அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் தோட்ட வீடு ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன், அங்கிருந்த சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக குறித்த மூன்று தோட்ட வீடுகளிலும் வசித்து வந்த சுமார் 10 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை தற்காலிக இடத்தில் தங்க வைக்க தோட்ட முகாமைத்துவ அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.