முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்ப்பு..!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இன்று இணைந்து கொண்டார்.

இதன்போது அவரை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தண்டிய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராகவும் நியமித்தார்.

2000 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சராகவும், 2007 இல் திறன்கள் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சிக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக பதவி வகித்தார்.

அவர் அமைச்சராக பதவி வகித்த காலங்களில் இளைஞர்களுக்காகவும்,வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காகவும் சிறந்த பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version