வரப்பிரசாதங்கள் சலுகைகளைக் கொண்டு கூட்டுச் சேர்த்துக் கொள்ளும் கொள்கை எம்மிடம் இல்லை.- சஜித் பிரேமதாச கருத்து..!

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமே நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 60வது கட்டமாக கெஸ்பேவ ஸ்ரீ சுதர்சன் மாதிரி பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறு இணைந்து கொள்ளும் யாருக்கும் எந்த அமைச்சுகளோ,பதவிகளோ, திணைக்கள தலைவர் பதவிகளோ அல்லது கூட்டுத்தாபண பணிப்பாளர் பதவிகளோ வழங்கப்படாது எனவும் நடுநிலையான முற்போக்காக பயணிக்கும் உகந்த தரப்பிற்கே இதில் பயணிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி உறுப்பினர்களை தக்கவைத்தல் மற்றும் சேர்த்துக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படாது எனவும் இந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version