வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசிகள் எதிர்வரும் 7ம் திகதி அல்லது அதற்க்கு பின்னர் வழங்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். வி தமிழ் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இன்னமும் சரியான திகதியை உறுதியாக கூற முடியாது இருப்பினும், அநேகமாக 7ம் திகதி முதல் வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசிகள் வழங்கும் பணியை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைளையும், தொற்றாளர்களை இனம் கண்டு அவர்களுக்கு சிகிச்சையளித்து, தனிமைப்படுத்தல் பணிகளை செய்வது அடங்கலாக சுகாதார துறை அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்ற போதும் மக்கள் போதியளவு கவனமாக இல்லையெனவும், அசமந்தப்போக்கோடு நடந்து கொள்வது சுகாதர துறைக்கு மிகுந்த கவலையளிப்பதாக அவர் வி தமிழுக்கு தெரிவித்தார்.
தடுப்பூசிகள் வழங்கப்படும் பணிகள் ஆரம்பிக்கும் நாள் உறுதி செய்யபப்ட்டதும் எந்த இடங்களில் எப்போது வழங்கபபடவுள்ளன என்ற திட்டம் முழுமையாயக அறிவிக்கபப்டுமெனவும் வைத்தியகலாநிதி லவன் தெரிவித்தார்.
