தேர்தலை ஒத்திவைக்கும் திட்டத்திற்கு பாகிஸ்தான் செனட்சபை அனுமதியளித்துள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருந்த தேசிய தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் பிரேரணைக்கு செனட் சபை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், நாட்டில் தேர்தலை நடத்தும் அமைப்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த அங்கீகாரம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.