அதிவேக நெடுஞ்சாலையின் 28 கிலோமீற்றர் தொடங்கொட பகுதியில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக மாத்தறை நோக்கி செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் பாதை முற்றாக மூடப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து பிடிகல நோக்கி பயணித்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஏற்றி செல்லும் லொறி ஒன்றின் பின் சக்கரங்கள் இரண்டும் வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.