மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வியாபார நிலையங்கள் சில முற்றுகையிடப்பட்டுள்ளன.
இதன் போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு ஏற்ற வகையில் காணப்படாத மரக்கறிகள், பழங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்லடி பொது சந்தை சதுக்கம், கல்லடி, திருகோணமலை வீதி, அரசடி, ஊறணி போன்ற பகுதிகளில் உள்ள வீதியோர வியாபார நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.