கடந்த 5 நாட்களில் இவ்வளவு டெங்கு நோயாளர்களா?

கடந்த 5 நாட்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி, புத்தளம் கம்பஹா, களுத்துறை, காலி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் டெங்கு நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதார அமைச்சு, பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து 24 மணித்தியால விசேட நடவடிக்கை நிலையமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து 011 7 966 366 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply