போராட்டத்தில் குண்டு தாக்குதலென துண்டு கொடுத்துவர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கடதாசி துண்டு ஒன்றில் எழுதி, எதிர்க்கட்சி தலைவரின் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 9 ஆம் திகதி குறித்த நபர், எதிர்க்கட்சி அலுவலகத்தின் பிரதம வாயிலில் வைத்து குறித்த துண்டினை வழங்கியுள்ளார். அன்றைய தினமே குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், கறுவா தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார்.


அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மற்றும் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது மேற்குறிப்பிட்டவாறு எழுதப்பட்ட துண்டுகளையும் கைப்பற்றியுளார்கள்.


பொலிஸ் மா அதிபர், குற்ற தடுப்பு பிரிவினரிடம் குறித்த விசாரணையை கையளித்ததாகவும், கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சளார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் குண்டு தாக்குதலென துண்டு கொடுத்துவர் கைது
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version