கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கிணங்க குறித்த இரு விடுமுறை தினங்களுக்கு பதிலாக எதிர்வரும் 20 ஆம் திகதி மற்றும் 27 ஆம் ஆகிய இரு தினங்கள் பாடசாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் வாரம் வழமைப்போல் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.