எதிர் கட்சித் தலைவர் மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் இடையே சந்திப்பு..!

நாட்டிற்கு விஜயம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுக்குழுவினரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய நிதியமைச்சர் உள்ளிட்ட ஜப்பானிய தூதுக்குழு பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இன்று காலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

ஜப்பான் தனது பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மூலம் அதன் ஏற்றுமதித் துறையை எவ்வாறு மேம்படுத்த முடிந்தது என்பது உள்ளிட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜப்பானின் புனரமைப்பு அனுபவத்திலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் எதிர்க்கட்சியின் பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கொழும்பு இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்துச் செய்வதற்கு முன்னைய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானத்திற்கு கவலை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,தமது கட்சியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் நிதியமைச்சரிடம் உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அல்லது துயுஐஊயு நிறுவனத்திடம் இருந்து பல வருடங்களாக பெற்ற ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

ஜப்பானின் வட பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply