ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளிடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சவாலான பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டியது.

ஆசியாவின் முன்னோடி முயற்சியான ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையினை வெளியிடுவதில் இலங்கையின் முயற்சிள் குறித்து அவர் இதன்போது பாராட்டியுள்ளார்.

கொள்கை சார்ந்த விடயங்கள் மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலப்பகுதியில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படி இலங்கை; அரசாங்க வருமானத்தை அதிகரித்துள்ளதாக அண்மைய சந்திப்பின் போத தெரியவந்துள்ளதாக தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அதன் மூலம் சர்வதேச சமூகம், உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன்வழங்குநர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரிப்பு போன்ற சாதகமான முடிவுகள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக மூலதனம் மற்றும் பொறிமுறை உருவாக்கம் ,மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும், தற்போதுள்ள ஆட்சிப் பொறிமுறையின் சீர்திருத்தங்களில் இது சாதகமான குறிகாட்டிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், தற்போதைய சீர்திருத்தங்கள், நிதி சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் நிர்வாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்,இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version