சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யபட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த மீனவர்களால் பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply