இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவச ரயில் என்ஜின்கள்..!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த எஞ்சின்கள் நாட்டில் இயங்குவதற்கு உரியவையா என ஆராய்வதற்காக இவ்வாறு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எஞ்சின்களை ஆய்வு செய்வதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தின 05 பரிசோதகர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.

நாட்டின் வடக்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு போக்குவரத்திற்கு இந்த எஞ்சின்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply