லிந்துலை – பாமஸ்டனில் மின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் இரு பிள்ளைகளின் தந்தையான 58 வயதான ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி ஆசிரியர் மயக்க முற்றதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சடலம் விந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.