சீனாவில் சக்தி வாயந்த நிலஅதிர்வு – இடிபாடுகளில் சிக்குண்டு பலர் உயிரிழப்பு..!

சீனாவின் வடமேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

சீனா ஜின் ஜியாங் மாகாணத்தின் இன்று அதிகாலை 7. 2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்போது, 47 பேர் வரை இடிபாடுகளில் புதையுண்டதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் நிலஅதிர்வு இந்திய தலைநகரான டெல்லி வரை உணரப்பட்டதுடன் பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

Social Share

Leave a Reply