கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 187 கிராம் ஹெரோயின், 126 கிராம் ஐஸ், 14 கிலோ 700 கிராம் கஞ்சா, 136 மாத்திரைகள், 148 கிராம் மாவா, 102 கிராம் மதன மோதக மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
07 சந்தேக நபர்கள் தடுப்பு உத்தரவின் பேரில், தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன், 17 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 28 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 23 சந்தேக நபர்களும், மேலும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 14 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.