சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இணையவழி வரைவு குறித்து விவாதிக்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக சபை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் இணையவழி சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.