அனைவரும் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீPதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் மக்கள் நலனை கருத்திற் கொண்டு தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீPதரன்; குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டினை விரைவாக முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீPதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.