பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக மேலும் இரு மனுத்தாக்கல்..!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக தீர்ப்பளிக்கப்பட வேண்டுமென கோரி மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணிகளின் கூட்டணி சார்பில் கலாநிதி தீபிகா உடுகமவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவினால் மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் இராணுவம், பொலிஸார் மற்றும் கடலோரக் காவற்படைக்கு குறித்த உத்தேச சட்டம் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனூடாக அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply