ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 13 ஆவது போட்டி நேற்று (24.01) பொட்செஸ்ட்ரூமில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேமி டங் 57(87) ஓட்டங்களையும், அடி ஹெஜ்ட் 32(72) ஓட்டங்களையும், அலெக் ப்ரிஸ் 31(42) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இசை தோர்ன் 4 விக்கெட்களையும், நேதான் சீலி 2 விக்கெட்களையும், நேதான் எட்வெர்ட், ரனிக்கோ ஸ்மித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 35.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜெவெல் அண்ட்ரு ஆட்டமிழக்காமல் 64(60) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ருவரித் மக்ளிண்டயர், குவசிம் கான், லோகன் பிரிக்ஸ், இப்ரஹிம் பைசல், அடில் ஹெஜ்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ஜெவெல் அண்ட்ரு தெரிவு செய்யப்பட்டார்.
நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 13 ஆவது போட்டி நேற்று (24.01) பொட்செஸ்ட்ரூமில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. இதில் பிபின் ரவல் 39(68) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அரபத் மின்ஹாஸ் 3 விக்கெட்களையும், உபைத் ஷா, அஹ்மத் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், குபைத் களில், மொஹமட் சீஷான், அலிப் அஸ்பன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. இதில் அசன் அவைஸ் ஆட்டமிழக்காமல் 63(82) ஓட்டங்களையும்,ஷமில் ஹுசைன் 37(59) ஓட்டங்களையும், ஷஹ்சைப் கான் 37(70) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த போட்டியின் நாயகனாக அசன் அவைஸ் தெரிவு செய்யப்பட்டார்.