கொம்பனித்தெரு சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டு உயிரிழந்தவரின் விபரங்கள் வெளியாகும் வரை சடலம் தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.