உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் பதவி வெற்றிடம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25.01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (24.01) ஹலவத்தை – பண்டாரவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இறக்கும் போது, ​​தற்போதைய அரசாங்கத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

சனத் நிஷாந்தவின் பதவி வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜகத் பிரியங்கர தகுதி பெற்றுள்ளார்.

Social Share

Leave a Reply