வாழைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியுறுதி அற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரித்த மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்று காணிக்கச்சேரிகளை நடாத்திய பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் எஸ். எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.சாதாத், கே. மோகனதாசன் (காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களம்), சி.எம்.எம். சமீம் (காணி வெளிக்கள போதன ஆசிரியர்) மற்றும் ஜி.சந்திரகாந்தன், எம்.எம்.அன்வர், எம் எஸ்.எப்.றியாஸா, எம்.ஏ.ரபிக் ஆகிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply