உலகின் மிக நீளமான பிரம்மாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பல் ரோயல் கரீபியன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
365 மீட்டர் நீளமுடைய இந்த கப்பல் 20 அடுக்குகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடுக்கிலும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக , நவீன வசதிகளுடன் கூடிய அறைகள் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 3 திரையரங்குகள், 40 உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
6 நீர்வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள் மற்றும் ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் காணப்படுகின்றது.
இந்த கப்பலில் 7,600 பயணிகள் பயணம் முடியும் எனவும் குறித்த கப்பலில் 2,350 பணியாளர்கள் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.