இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற பலநாள் மீன்பிடி படகொன்றும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள இந்த படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.