மாலைத்தீவில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 25 ஆம் திகதி மாலைத்தீவின் கடலோரக் காவற்படைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மீன்பிடி படகுகள்; கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது ஒரு படகில் ஏழு பணியாளர்களும் மற்றைய படகில் ஆறு பணியாளர்களும் இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட படகுகள் மாலைத்தீவு கடலோர காவற்படை கப்பலான நூராதீனின் காவலில் ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மீன்பிடி படகுகளும் மாலே நகருக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மாலைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.