நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் தக்காளியின் மொத்த விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக தோட்டங்களில் பயிரிடப்பட்ட தக்காளி பயிர் அழிவடைந்துள்ளமையினால் தக்காளிக்கு சந்தையில் கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாக ஒரு கிலோ கிராம் தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.