ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி..!

கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரத்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதிகள் 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளன.

2022ஆம் ஆண்டை காட்டிலும் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்தில் 0.39 சதவீதமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply