நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர் என இலங்கை ஊடகம் வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட குறித்த நபர்
1989 ஆம் ஆண்டு பிறந்து, கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்ப கல்வியினை கற்ற இவர் 7 வயதில் வெளிநாடு சென்ற எம்.சம்சுதீன் எனவும் தகவல் வெளியாகியுள்ளதாக வீரகேசரி மேலும் தெரிவித்துளளது. இவரது தந்தையும். மூத்த சகோதரியும் கனடாவில் வசிக்கும் அதேவேளை மூத்த சகோதர்கள் இருவர் மாத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட நபர் IS தீவிர வாதிகளுடன் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஒருவர். இவ்வாறான நிலையிலேயே குறித்த நபர் நேற்றைய தினம் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version