சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்வதை பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
புதிய நிகழ்நிலை காப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளான இந்தச் சட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து நேற்று நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.