இந்தியா பயணமாகும் வலுசக்தி அமைச்சர்

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாளை(06.02) இந்தியா, கோவாவில் ஆரபிக்கவுள்ள இந்தியா வலுசக்தி வார நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக பயணிக்கவுள்ளார். இந்தியா பெற்றோலியா மற்றும் இயற்கை வாயு அமைச்சின் அழைப்பின் பேரில் தான் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவித்துளளார்.

இந்த பயணத்தில் இரு தரப்பு சந்திப்புகள், அமைச்சு மட்ட வட்ட மேசை மாநாடு ஆகியவற்றிலும் இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனத்துடனான கூட்டம், எண்ணை மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம், NTPC நிறுவனம், போன்ற நிறுவனங்களுடன் சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளதாக காஞ்சன தெரிவித்துள்ளார்.

இந்தியா பயணமாகும் வலுசக்தி அமைச்சர்

Social Share

Leave a Reply