சுதந்திர தின விழாவில் மக்கள் பங்கேற்கத் தடை என்றால் சுதந்திரம் எங்கே உள்ளது?

சுதந்திர தின தேசிய நிகழ்வில் நாட்டு மக்கள் பங்கேற்கத் தடை என்றால் எங்கே சுதந்திரம் உள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 86 ஆவது கட்டமாக,அனுராதபுரம்,நொச்சியாகம வித்யார்த்த மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வீதிகளுக்கு தடுப்பு வேலிகளைப் போட்டு,பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு,நாட்டு மக்களுக்கு பங்கேற்க வாய்ப்பளிக்காமல்,76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்டம் எனும் பெயரில் தகவல் அறியும் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் தற்போது கூட கொள்ளை செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வுக்கு செலவழிக்கப்பட்ட கோடிக் கணக்கான பணத்தை பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும்,அரசாங்கம் அவ்வாறான ஒன்றை செய்யவில்லையென குற்றம் சுமத்திய சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்போம் என உறுதியளித்துள்ளார்.

Social Share

Leave a Reply