நோர்வூட் வீதியில் வெட்டிக்கொண்டிருந்த மரத்திலிருந்த கிளை ஒன்று, வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் மீது விழுந்ததில், காயமடைந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் கல்லூரியில் 09ம் ஆண்டில் கல்வி கற்கும் 14 வயதுடைய முருகன் அசாந்த் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வீதியில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.