ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள அடுத்த நாடு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

அதன் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 08 மற்றும் 09ம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றினையும் ஆற்றவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அந்நாட்டு தலைவர்களுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

Social Share

Leave a Reply