ஹெலிகப்டர் விபத்தில் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு..!

சிலியில் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் அந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா உயிரிழந்துள்ளார்.

சிலியின் லாகோ ரான்கோ பகுதிக்கு சுற்றுலா சென்ற போது ஹெலிகப்டர் விபத்து இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

74 வயதான செபஸ்டியன் பினேர இரு முறை சிலியின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

விபத்தில் மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படதாக நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply