இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி((VSV, USP rcds, MSc (DS), psc, FCMI) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய(07.01) தினம் நியமித்தார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தில் அவர் ஆற்றிய தாராள பங்களிப்பு காரணமாக 2001 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.53 வருட கால கடற்படை வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கடற்படை தளபதியாக இவர் வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்.
கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்ட பின்னர் ஏறக்குறைய 4 வருடங்கள் இலங்கை கடற்படையை போற்றத்தக்க வகையில் வழிநடத்தினார். தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஒரு தீவு நாடாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பலம் வாய்ந்த படையாக தனது படைகளை மாற்றுவதற்கு அவர் பாடுபட்டார்.கடற்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்று நான்கு வருடங்களும் எட்டு மாதங்களும் குறித்த பதவியில் பணியாற்றினார்.
ஓய்வுபெற்றதன் பின்னர் அவர்,2005 செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி அன்று அட்மிரல் பதவியுடன் பாதுகாப்புப் படைகளின் பதவிநிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.2005 ஜூன் மாதம் 12 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்,2015 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நான்காவது பீடாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
1947 ஆம் ஆண்டில் பிறந்த அட்மிரல் சந்தகிரி அவர்கள்,வேயாங்கொடை செயின்ட் மேரி கல்லூரியில் மற்றும் கேகாலை மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.1966 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கடற்படையின் இணைந்து கொன்ட இவர்,திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் முதலாம் கெடட் அதிகாரி ஆட்சேர்ப்பில் கெடெட் அதிகாரியாக இணைந்து கொள்ளும் சிறப்புரிமை 1966 ஆண்டு ஜலை மாதம் 01 ஆம் திகதி பெற்றுள்ளார்.1973 ஜூலை மாதம் முதலாம் திகதி சப் லெப்டினன்ட் ஆக ஆணையளிக்கப்பட்ட இவர் நீண்ட ஆயுதங்கள் பயிற்ச்சி பெற்று 1984 ஆண்டில் இந்தியாவில் வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
1985 ஆம் அண்டு ஜனவாரி 01 திகதி கமாண்டர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி,
பணியாளர்கள் நல அலுவலர், பணியாளர்கள் தொடர்பாடல் அதிகாரி,புலனாய்வு அதிகாரி மற்றும் தலைமையகத்தில் பிரதிப் பணிப்பாளர் கடற்படை நடவடிக்கை போன்ற பொறுப்புக்களை வகித்துள்ளார்.பின்பு முறையே கெப்டன் மற்றும் கொமொடோர் தரத்துக்கு உயர்வு பெற்றார்.கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதியாகயவும் அவர் பதவி வகித்துள்ளார்.
வடக்கு,கிழக்கு,மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளின் தளபதியாகவும் செயல்பட்டுள்ளார்.அவர் அடுத்தடுத்து 4 கடற்படை தளபதிகளினால் பணிப்பாளர் கடற்படை நடவடிக்கை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.1996 ஆண்டில் இங்கிலாந்து பாதுகாப்பு பணியாளர்கள் பாடநெறி கற்றலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிகாரியாக இவர் மரியாதை பெற்றுள்ளார்.1997.03.08 ஆம் திகதி ரியர் அட்மிரல் பதவிக்காக பதவியுயர்வு பெற்று 1998.04.01 திகதி கடற்படை தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டார்.
1998 இல் வடக்கு கடற்படை கட்டளை தளபதியாக பணியாற்றிய இவர் காரைநகர் தீவு மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தை இணைப்பதற்கான கரையோர பாதை சரி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார். தம்பகொலபட்டுன சங்கமித்தா போதின் வஹன்சே வந்த இடத்தில் விகாரை உறுவாக்குதல்,பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட ஹிரிகடு சேய விகாரை மற்றும் பாதை புனரமைப்பு போன்ற பல தொண்டு பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
2001.01.01 திகதி வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்த்தபட்டத்துடன்,கடற்படை தளபதி பதவியில் கடமையாற்றிய இவர்,2004 ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் மற்றும் சேதமடைந்த கடல்சார் சொத்துக்களை மீட்டெடுக்கத் தேவையான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொண்டுள்ளார்.
தேசிய கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் கூடைப்பந்து சங்கத்தின் செயலாளராக பணியாற்றியுள்ள இவர்,பிறகு அதிமேதகு ஜனாதிபதியின் பரிந்துரையின் பிரகாரம் 2004.09.15 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சலில் இத்தகைய பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் கடற்படை அதிகாரியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
2005.09.01 ஆம் திகதி அட்மிரல் பதவிக்கும் தரமுயர்த்தப்பட்டார்.
அவரது பதவி காலத்தில் அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக விசேட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்),
விதிவிலக்கான திறன்,தகுதி மற்றும் முன்மாதிரியான நடத்தை ஆகியவற்றில் மதிப்புமிக்க சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக வழங்கப்படும் உத்தம சேவா பதக்கம்,இலங்கைக் குடியரசு ஆயுத சேவை பதக்கம்,இலங்கை கடற்படையின் 50 ஆவது ஆண்டு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம், ஜனாதிபதி பதவியேற்பு பதக்கம்,50 ஆவது சுதந்திர ஆண்டு நினைவேந்தல் பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வலையொளி இணைப்பு-
NEWS CLIP ☎️ https://youtu.be/YZ4XqcCT15g?si=8gXLIX5nm0W9mC1k