விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாதத்தில் முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 5,000 ரூபாவாக காணப்பட்ட விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2,000 ரூபாவாக காணப்பட்ட முதியோருக்கான கொடுப்பனவினை 3,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.