லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்..

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது. 

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், எதிர்வரும் மார்ச் மாதம் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் கிண்ணம், கொழும்பில் எதிர்வரும் 15ம் திகதி வெளியிடப்படவுள்ளது. 

இதன் போது தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன், இந்த நிகழ்வினை சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பர்வீஸ் மஹ்ரூப் தொகுத்து வழங்கவுள்ளார்.

7 அணிகள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டித் தொடரில், 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 90 புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 

Social Share

Leave a Reply