பிரபல ஹிந்தி நடிகரான ஆமிர் கானின் ‘தங்கல்’ (Dangal) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் (Suhani Bhatnagar) உடல்நலக்குறைவால் இன்று (17) உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் ஹரியானாவின் மாநிலத்தின் ஃபரிதாபாத்(Faridabad) நகரத்தை சேர்ந்த 19 வயதான சுஹானி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுஹானி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த ‘தங்கல்’ திரைப்படத்தில் ஆமிர் கானின் மகளாக, பபிதா போகட் (Babita Phogat) என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர்.
சுஹானியின் மரணம் தொடர்பில் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் X தளத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளது.