ஆப்கானிஸ்தானோடு தொடரும் இலங்கையின் வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (17.02) முதலாவது T20 போட்டி ரங்கிரி தம்புள்ளையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதில் வனிந்து ஹசரங்க 67(32) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்களையும், நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஓமர்ஸை ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், நூர் அஹமட், கரீம் ஜனட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. இதில் இப்ரஹிம் சட்ரன் ஆட்டமிழக்காமல் 67(55) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மதீஷ பத்திரன 4 விக்கெட்களையும், தசுன் ஷானக 2 விக்கெட்களையும், அஞ்சலோ மத்தியூஸ், மஹீஸ் தீக்ஷண, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இது மதீஷ பத்திரனவின் சிறந்த பந்துவீச்சு பெறுதி ஆகும்.

இந்த போட்டியின் நாயகனாக மதீஷ பத்திரன தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply